பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணிடம் சாமியார் செய்த செயல்.. கதறி அழுத பரிதாபம்.. கசிந்த வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
1215Shares

இந்தியாவின் கர்நாகாவில் பேய் விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சவுக்கடி கொடுத்த சாமியாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புவார்கள், ஒரு சிலரோ அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவதுண்டு.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், ஆபானி என்கிற இடத்தில் அமைந்துள்ளது மாரிகாம்பா அம்மன் கோவில். இங்கு பூசாரியாக இருக்கும் மல்லிகார்ஜுன் என்பவர், ஒரு பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாகக்கூறி சரமாரியாக சவுக்கால் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அடிக்க வேண்டாம் என அப்பெண் கதறியும், சாமியார் அவர் தலைமுடியை பிடித்து இழுத்து அடிக்கிறார்.

இது பொலிசாரின் பார்வைக்கும் சென்ற நிலையில் இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்