அழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு மொடலின் சர்ச்சை பதில்: வைரல் வீடியோ!

Report Print Vijay Amburore in இந்தியா
282Shares

இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் நடைபெற்ற அழகி போட்டியின் போது, மொடல் அழகி பேசியிருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில், 'மிஸ் கோஹிமா 19' என்ற அழகுப் போட்டி நாகாலாந்து மாநிலத்தில் நடைபெற்றது. போட்டியின் போது மொடல் அழகிகளிடம் மாதிரி கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அந்த வகையில் இரண்டாவது இடத்தை பிடித்த விக்கோனுவோ சச்சுவிடம், "பிரதமர் மோடியுடன் தொடர்பு கொள்ள உங்களுக்கு வாய்ப்பு இருந்தால், அவர்களிடம் நீங்கள் என்ன பேசுவீர்கள்?" என ஒரு நடுவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிறிது நேரம் யோசித்த விக்கோனுவோ, "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தால், மாடுகளில் கவனம் செலுத்துவதை விட இந்தியாவில் பெண்களின் நிலைமையைப் பார்க்கும்படி அவரிடம் கூறுவேன்" என பதில் கொடுத்தார்.

இதனை கேட்டதும் அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். இந்த வீடியோ காட்சியானது 60,000 பார்வையாளர்களை கடந்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்