சர்வதேச 'செல்வாக்குமிக்க 100 பெண்கள்' பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா
142Shares

சர்வதேச அளவில் செல்வாக்குமிக்க 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 100 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

உலகெங்கிலும் மாறுபட்ட பின்னணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் செல்வாக்குமிக்கவர்களாக விளங்கும் 100 பெண்களை தேர்ந்தெடுத்து பிபிசி நிறுவனம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த 7 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் வெவ்வேறு துறையை, வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டுமின்றி, இளம் வயது பெண் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை உள்ளனர்.

காஷ்மீரின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் மனித உரிமை ஆர்வலர் பர்வீனா அஹாங்கர், இளம் கவிஞர் 21 வயதான அரன்யா ஜோஹர், இந்திய விண்வெளிப் பெண் என்ற அழைக்கப்படும் சுஷ்மிதா மோஹண்டி இடம்பெற்றுள்ளனர்.

மேலும், பாலின ஆர்வலர் சுப்பலட்சுமி நந்தி, யோகா குரு 26 வயதான நடாஷா நோயல், இந்திய சிப்கோ இயக்கம் நடத்திய வந்தனா சிவா, பெண் மருத்துவர் வந்தனா சிங் ஆகிய எழுவர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்