வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய சென்னை இளைஞர்.. ஹொட்டலில் தங்கவைத்து... கண்ணீருடன் விளக்கம்

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கி தனிமையில் தவிக்கவிட்டு சென்ற சென்னை இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விதுவேனியா நாட்டை சேர்ந்தவர் உக்னே பெரேவர்சவெயிட் (22). இளம்பெண்ணான இவர் சென்னை ஆயிரம் விளக்கு பொலிசில் கண்ணீர் மல்க புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில் பல்வேறு கனவுகளுடன் நான் துபாயில் தங்கியிருந்து மேல்படிப்பு படித்து வந்தேன். அப்போது சென்னை அமைந்தகரையை சேர்ந்த தொழில் அதிபர் ருமையாஸ் அகமது (27) துபாயில் என்னை சந்தித்தார்.

அவர் என்னை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகியதோடு என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

இதனால் அவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன். இதன் விளைவாக நான் கர்ப்பமானேன்.

அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையில் ஒரு நட்சத்திர ஹொட்டலில் தங்கவைத்தார்.

பின்னர் அவரும், அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தியதின் பேரில் தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் எனக்கு கருக்கலைப்பு நடந்தது.

அதன்பிறகும் அவர் கொச்சி உள்பட பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச்சென்று, என்னோடு உல்லாசமாக இருந்தார்.

அதன் விளைவாக தற்போது நான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன்.

அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது குடும்பத்தினர் தமிழகத்தை விட்டு நீ ஓடி விடு என்று எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

சென்னையில் என்னை தனியாக தவிக்க வைத்து விட்டு ருமையாஸ் தலைமறைவாகி விட்டார் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ருமையாஸ் மற்றும் அவர் தந்தை அப்துல் கரீமை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் மாணவி உக்னே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்