ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளவன் தாக்கல் செய்த மனு ஏற்பு! வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்ககோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கு முதலில் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய நிலையில் பின்னர் அதை ஆயுள் தண்டனையாக மாற்றியது.

பின்னர் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறிய போதும் அவர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்று கொள்வதாக தற்போது உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த மனுவை நீதிபதிகள் நவம்பர் 5ஆம் திகதி விசாரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்