சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்தால்? விஜயகாந்த் மனைவி அதிரடி பேச்சு

Report Print Santhan in இந்தியா

நாம் தமிழர் கட்சியை தடை செய்தால் மற்ற கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில், அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை தமிழர் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்று கூறியிருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சினர் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அவரை கைது செய்ய வேண்டும், அவரது கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

சீமான் இது போன்று என் மீது பல வழக்குகள் உள்ளன. நான் இதை வாபஸ் பெறப்போவதில்லை என்று தைரியமாக கூறினார்.

இந்நிலையில் தேமுதிகவை சேர்ந்தவரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், சீமானின் சர்ச்சை பேச்சு பற்றி கூறுகையில், பிரச்சார நேரத்தில் மறைந்த தலைவர்களைப் பற்றி அனைவரும் பேசுவது வழக்கம் தான், இதே போல் தான் கமலும் பேசி வருகிறார்.

சீமானின் கருத்து ஏற்க முடியாது ஒன்று என்றாலும் அவர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளையும் தான் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்