சீமான் குறித்து விடுதலைப் புலிகளின் சட்டத்துறைப் பிரதிநிதி வெளியிட்ட காணொளி

Report Print Basu in இந்தியா

ராஜீவ் காந்தி கொலைக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் சம்மந்தமில்லை என தற்போது புலிகளின் சார்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் லதன் சுந்தரலிங்கம் அவர்கள், சில மாதங்களுக்கு முன்பாகவே சீமான் குறித்து வெளியிட்ட காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

சமீபத்தில் விக்கிரவாண்டியில் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சையாக பேசினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சீமான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து, ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டது.

அந்த அறிக்கையில் சட்டத்துறைப் பிரிதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியற்துறைப் பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் கையொப்பம் இட்டுருந்தனர்.

இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பாகவே சீமான் மற்றும் நாம்தமிழர் குறித்து விளக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டத்துறைப் பிரதிநிதியான லதன் சுந்தரலிங்கம் காணொளி வெளியிட்டிருந்தார்.

லதன் அவர்கள் விடுதலைபுலிகளின் சார்பாக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வாதாடி,புலிகள் மீதான தடை ஐரோப்பிய ஒன்றியத்தில் நீங்க காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில், சர்வதேச அளவில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டமைப்பை சிதைக்கும் வேலைகளில் சீமான் ஈடுபடுகிறார் என லதன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்