கல்லூரி மாணவியின் வீட்டிற்குள் திடீரென நுழைந்த 15 வயது சிறுவன்.. செய்த விபரீத செயல்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய 15 வயது சிறுவன், பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தார். பிடெக் படித்து வந்த குறித்த மாணவியின் வீடு 8வது மாடியில் இருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை மாணவியின் பெற்றோர் வெளியில் சென்ற சமயத்தில், அதே குடியிருப்பில் வசிக்கும் 15 வயது சிறுவன் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், குறித்த மாணவியின் அடி வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் வலியால் துடித்த மாணவி அலறினார். உடனே மாணவியை ஓர் அறைக்குள் தள்ளிய சிறுவன், மற்றொரு அறைக்குள் புகுந்து கதவை பூட்டிக்கொண்டார்.

சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மற்றொரு அறையில் தேடியபோது சிறுவன் அங்கு இல்லை. அவரை தேடியபோது 8வது மாடியில் இருந்து, குடியிருப்பின் பின் பகுதியில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அவர் பயத்தில் மேலிருந்து குதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது பெற்றொரிடம் பொலிசார் விசாரித்தபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்