குடும்பத்தினர் 6 பேரை கொன்ற பெண்ணின் முகத்தை பார்க்க ஆசைப்பட்ட இளைஞர்.. வழக்கில் புதிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவை அதிரவைத்த ஜோலி விடிய விடிய நரபலி கொடுக்கும் சாத்தான் பூஜை நடத்தியுள்ளார் என்ற புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்த ஜோலி கடந்த 2002 முதல் 2016 வரை கணவர் ராய் தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட 6 பேரை அடுத்தடுத்து உணவில் சயனைடு விஷம் வைத்து கொலை செய்தார்.

இந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட ஜோலியிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருவதில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் ஜோலி சாத்தான் பூஜை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

அதாவது துர்மந்திரவாத பூஜை அது.

கோழிக்கோட்டில் நடந்த பூஜையில் ஜோலி தவறாமல் கலந்து கொண்டு இருக்கிறார். கட்டப்பனையில் கிருஷ்ணகுமார் என்ற ஜோசியக்காரர் தான் சாத்தான் பூஜைகள் செய்வாராம்.

இந்த பூஜையின் நோக்கம் பணம், கூரையை பிய்த்து கொண்டு கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்பதுதான். இது எல்லாவற்றையும் விட அதிர்ச்சியான விடயம் நரபலி கொடுத்தால் தான் பூஜையின் நோக்கம் நிறைவேறுமாம்.

ஒரு வேளை, 6 பேரை ஜோலி கொன்றது கூட இதற்காகத் தானோ பொலிசார் தற்போது சந்தேகம் கொண்டுள்ளார்கள், இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் மருத்துவ பரிசோதனைக்காக ஜோலி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவர் முகத்தை துணியால் மூடி பொலிசார் அழைத்து சென்றனர்.

அவரைப் பார்க்க ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் இளைஞர் ஒருவர், ஜோலி முகத்தை காண அவர் மூடியிருந்த துணியை அகற்றினார்.

இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர், விசாரணையில் அவர் பெயர் சாஜீ என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்