கொள்ளையன் முருகனுக்கு வந்த உயிர்கொல்லி நோய்... தங்களுக்கும் பரவியிருக்கும் என பயத்தில் தமிழ் நடிகைகள்

Report Print Raju Raju in இந்தியா

கொள்ளையன் முருகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக தெரியவந்த நிலையில் அவருடன் தொடர்பு வைத்திருந்த நடிகைகள் தங்களுக்கும் அந்த நோய் பரவியிருக்குமோ என அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் திருடிய முருகன், சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொள்ளையடித்த பணத்தில் அவர்கள் சொகுசாக வாழ்ந்ததுடன் தமிழ், தெலுங்கு நடிகைகளுக்கு பணத்தை வாரி இறைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

மேலும் விஜய், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்த நாயகியை இருவரும் படத்தயாரிப்பு விடயம் சம்மந்தமாக சந்தித்து நகையை பரிசாக கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து சுரேஷ் கும்பலுடன் உல்லாசமாக தொடர்பில் இருந்த தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் குறித்தும் விசாரிக்க பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தான், கைது செய்யப்பட்ட முருகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தன்னுடன் பழகும் நடிகைகளிடம் முருகன் மறைத்து அவர்களுடன் நெருக்கத்தில் இருந்துள்ளார்.

இது தற்போது வெளியில் தெரிந்ததால் அதிர்ச்சியடைந்துள்ள அவருடன் நெருக்கத்தில் இருந்த நடிகைகள், தங்களுக்கும் முருகனிடம் இருந்து உயிர்கொல்லி நோய் பரவி இருக்குமோ என அச்சத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையில் கொள்ளை வழக்கில் இருந்து தப்பிக்க தமிழக பொலிசாருக்கு முருகன் லஞ்சம் கொடுத்ததாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு முன்னரே பல இடங்களில் முருகன் கொள்ளையடித்திருந்தாலும் அவர் மீது திருவாரூரில் வழக்கு பதியப்படவில்லை.

காரணம் பொலிசாருக்கு பணம், நகை, கார்களை லஞ்சமாக அவர் கொடுத்திருக்கிறார்.

திருவாரூர் எஸ்.பிக்கு 18 லட்சத்தில் சொகுசு காரை வாங்கி கொடுத்த முருகன் அவரின் இரண்டு மனைவிகளுக்கு தான் திருடிய நகைளில் பலவற்றையும் கொடுத்துள்ளார்.

இப்படித்தான் 2017-ம் ஆண்டில் அண்ணாநகர் பகுதியில் ஒரு கொள்ளையில் ஈடுபட்ட முருகன் அதிலிருந்து தப்பிக்க உயர் அதிகாரி ஒருவருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளான்.

அதிகாரியிடம் போனில், என்ன வேணும் சார்? எல்லாரும் என்னை விட்டுட்டு, வேற வேற வழக்குக்கு போய்ட்டாங்க. நீங்க மட்டும் ஏன் என்னை பிடிக்கனும் என வெறியாக இருக்கீங்க? என அவரிடம் நைசாக பேசியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்