தன்னுடைய கணவரை வேறொரு பெண்ணுக்கு விற்ற மனைவி... எவ்வளவுக்கு கொடுத்தார் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிந்த மனைவி, அவருக்கே கணவரை 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர், சில ஆண்டுகளாகவே தனது வீட்டை விட்டு வெளியேறி, வேறொரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அவர் அடிக்கடி அங்கு சென்று கண்டித்து வந்துள்ளார். அதோடு தன்னுடன் வந்துவிடுமாறு கணவரிடம் கெஞ்சியுள்ளார்.

இந்நிலையில் மனைவியாக இருக்கும் பெண்ணுக்கு கடன் இருப்பதை அறிந்து கொண்ட அந்த பெண், உடனடியாக அவரிடம் சென்று நான் உனக்கு தேவையான அளவு பணம் கொடுக்கிறேன், உன்னுடைய கணவரை விட்டுத் தருகிறாயா? என்று கேட்டுள்ளார்.

ஆனால் முதலில் இதற்கு மறுத்ததால், அவர் பணத்தின் ஆசையை அவருக்கு காண்பித்துள்ளார். இதனால் மனைவியாக இருக்கும் பெண் 17 லட்சம் ரூபாய் கேட்க, இறுதியில் 5 லட்சம் ரூபாய் முடிவுக்கு வந்ததால், அவர் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு, இனிமேல் நான் கணவரை கேட்டு தொந்தரவு செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், இது தொடர்பான பொலிசார் விசாரணை மேற்கொள்ளலாம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்