வெளிநாட்டில் உயிரிழந்த கணவன்! உள்ளூரில் மனைவிக்கு நேர்ந்த கதி... அக்கம்பக்கத்தினர் கூறிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டில் வேலை செய்த கணவர் உயிரிழந்த நிலையில் உள்ளூரில் வசித்த மனைவியும், ஐந்து வயது மகளும் மர்மமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் வேதவள்ளி. இவர் கணவர் அமெரிக்காவில் பணிபுரிந்த போது உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து தனது மகள் கார்குழலி (5) யுடன் வேதவள்ளி, பெற்றோர் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு இரண்டு மணிக்கு வேதவள்ளி வீட்டில் தகறாறு ஏற்பட்டதாகவும், சற்று நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதோடு வேதவள்ளியின் தம்பி மாதவனுக்கு தலையில் ரத்தக் காயங்கள் இருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் கதவை உடைத்து பார்த்தபோது வேதவள்ளி சடலமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

பின்னர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் வீட்டில் ஆங்காங்கே ரத்தக் கறைகளுடன் டிவி உள்ளிட்டவை உடைக்கப் பட்டிருந்துள்ளது.

இதனிடையே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேதவள்ளியின் மகளும் உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனைக்கு வரும் போதே குழந்தை உயிரிழந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக வேதவள்ளி குடும்பத்தாரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்