வீட்டில் அழுகிய நிலையில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள்

Report Print Raju Raju in இந்தியா

புதுச்சேரியில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கடன் பிரச்னையால் அவர்கள் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் பகுதியில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி மகேஸ்வரி ஆரோ பவுண்டேஷனில் பணிபுரிந்து வந்தார்.

இவர்களது மூத்த மகள் கிருத்திகா 12 ஆம் வகுப்பும், இளைய மகள் சமிக்ஷா எட்டாம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள உறவினர்கள் கடந்த திங்கள்கிழமை அன்று மகேஸ்வரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

அதன்பின்பு நேற்று தொடர்பு கொள்ள முயர்சித்தபோது சுந்தரமூர்த்தி, மகேஸ்வரி ஆகிய இருவரின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன.

இதையடுத்து நான்கு உடல்களையும் பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் தீராத கடன் பிரச்னை காரணமாக உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு அவர்கள் தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்