சொகுசு பங்களாவில் 10 ஆயிரம் கருக்கலைப்புகள்! தமிழகத்தை அதிர வைத்த தம்பதி! வழக்கில் புதிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பத்தாயிரம் பேருக்கு கருக்கலைப்பு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போலி பெண் மருத்துவர் ஆனந்தி 4வது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு தான் மருத்துவர் என கூறிகொண்டு பத்தாயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.

இவருக்கு உடந்தையாக கணவர் தமிழ்ச்செல்வன்(52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(48) ஆகியோர் என நால்வரும் கடந்த 2015ல் கைது செய்யப்பட்டனர்.

இந்த தம்பதியின் செயல் தமிழகத்தி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பின்னர் அவர்களிடம் கருக்கலைப்பு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு 2016ல் ஜாமீனில் வெளிவந்த ஆனந்தி மீண்டும் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு வேலையை செய்து வந்துள்ளார்.

சென்னை மருத்துவ ஆணையின் தலைமையிலான அதிகாரிகள் ஆனந்தியை கைது செய்து சிறையிலடைத்தனர்.

பிறகு எப்படியோ ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே வந்த ஆனந்தி இரண்டு வருடங்களாக எந்தவித அடையாளமும் இன்றி இருந்துள்ளார்.

2018ம் ஆண்டு ஆனந்தி வேங்கிகால் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி வாழ்ந்து வருவதாகவும், அதில் மீண்டும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செயல்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மீண்டும் பிடிப்பட்ட ஆனந்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவிட்டார். அவரோடு சம்பந்தப்பட்ட கருக்கலைப்பு ஏஜெண்டுகள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சில மாதங்கள் முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ஆனந்தி மீண்டும் கருக்கலைப்பில் ஈடுப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல்கள் கிடைத்ததால் மீண்டும் நான்காவது முறையாக கைது செய்யப்பட்டு ஆனந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers