திருமண அழைப்பிதழ் தர சென்ற தம்பதிக்கு தயாராக வெட்டி வைக்கப்பட்ட குழி! சினிமாவை மிஞ்சிய சம்பவத்தில் திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில் புதிய தகவலாக மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 15 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (50). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி வசந்தாமணி (42). இவர்கள் மதுரை ஆரப்பாளையத்தில் வசித்து வந்தனர்.

கணவன்- மனைவி இருவரும் தங்களது மகன் பாஸ்கரனின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்தநிலையில் செல்வராஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருப்பூரின் உத்தாண்டகுமார வலசை சேர்ந்த தனது அக்காள் கண்ணம்மாள்( 54) வீட்டுக்கு வந்தார்.

அதன்பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தியதில் சொத்து தகராறில் கண்ணம்மாள், அவருடைய மருமகன் நாகேந்திரன், அவரது நண்பர் இளங்கோ ஆகியோர் சேர்ந்து செல்வராஜ், வசந்தாமணியை கொலை செய்து கண்ணம்மாளின் வீட்டுக்கு அருகே புதைத்தது தெரியவந்தது.

மேலும் சம்பவத்துக்கு முன்னரே தயாராக கண்ணம்மாள் உறவினர்களுடன் சேர்ந்து அவர்களை புதைக்க குழியை வெட்டியுள்ளார்.

இந்த வழக்கில் கண்ணம்மாள், நாகேந்திரன், இளங்கோ ஆகிய 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் கொலையான தம்பதியிடம் இருந்து 15 பவுன் நகையை எடுத்து கண்ணம்மாள் தனது மகளான பூங்கொடியிடம் (32) கொடுத்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பொலிசார் பூங்கொடியை கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில், 15 பவுன் நகையை அவர் ஈரோட்டில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்து ரூ.2 லட்சம் பெற்றது தெரியவந்தது. அந்த நகையை பொலிசார் மீட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers