திருவண்ணாமலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு விமலா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்த சில மாதங்களிலே கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் சண்டை பெரிதானதை அடுத்து, மனம் உடைந்த விமலா கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இனிமேல் மனைவி வீட்டிற்கு திரும்ப மாட்டார் என நினைத்த மணிகண்டன், 2 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த விமலா உடனடியாக பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், மணிகண்டன், மாமியார் கஸ்தூரி, மாமனார் ஜெகன்நாதன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.