சீமான் மீது புதிதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! காரணம் இதுதான்

Report Print Kabilan in இந்தியா

தமிழக அமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக, நாம் தமிழர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், சீமானை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சீமான், தூத்துக்குடியில் அளித்த பேட்டியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, அவரை கைது செய்ய வேண்டும் என்று பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் மீது விசாரணை நடத்திய பொலிசார், சீமான் மீது அவதூறாக பேசியது, கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்