மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை... எதார்த்தமாக வந்த ரிக்‌ஷா: கவனத்தை ஈர்த்த வீடியோ

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ரிக்‌ஷா வண்டியின் மீது குழந்தை ஒன்று தவறி விழுந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கர் பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவர் ரிக்‌ஷாவைத் தள்ளிக்கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அவரது ரிக்‌ஷாவின் மீது ஏதோ ஒரு பொருள் விழுந்தது போல் இருந்தது. இதனையடுத்து ரிக்‌ஷாவின் பின்பக்க சீட்டில் திரும்பிப்பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார்.

குழந்தை ஒன்று ரிக்‌ஷாவுக்குள் இருந்தது. மாடியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அங்கிருந்து தவறி ரிக்‌ஷாவுக்குள் விழுந்துவிட்டது.

குழந்தை விழுந்ததையடுத்து உறவினர்கள் ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக குழந்தைக்குப் பெரிதாக காயங்கள் எதும் ஏற்படவில்லை.

இதனையடுத்து அந்த ரிக்‌ஷா சாரதி மற்றும் குழந்தையின் பெற்றோர் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் பயப்படும் படியாக ஒன்றும் இல்லை. குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர்.

சாலையில் ரிக்‌ஷா தொழிலாளி நடந்து வருவதும் குழந்தை தவறி விழுந்ததும் அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. இதுகுறித்த பேசிய குழந்தையின் தந்தை, வீட்டின் இரண்டாவது தளத்தில் உறவினர்களுடன் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது.

அப்போது, அங்கிருந்து தவறி கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ரிக்‌ஷாவில் விழுந்ததால் குழந்தை உயிர் பிழைத்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்