தென்னிந்திய நடிகர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.... பிரதமர் மோடிக்கு பிரபல நடிகரின் மனைவி கூறியது!

Report Print Abisha in இந்தியா

தென்னிந்திய நடிகர்கள் எல்லாவற்றிலும் புறக்கணிக்கபடுகிறார்கள் என்று பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி பிரதமருக்கு வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் நிறைவடைந்ததையொட்டி பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கொண்டாடினர். பிரதமர் இல்லத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், பல பாலிவுட் நடிகர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, இந்த நிகழ்வில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவியான உபாசனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமரின் இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

upasanakaminenikonidela/ Instagram

அதில், ``டியரஸ்ட் நரேந்திர மோடி ஜி, தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கின்றோம். உங்களை பிரதமராக கொண்டதற்காக மிகவும் பெருமை கொள்கிறோம்.

ஆனால், பெரிய ஆளுமைகள், கலாசார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. தென்னிந்திய சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவே நாங்கள் உணர்கின்றோம். நான் என் உணர்வுகளை வேதனையுடன் இங்கே வெளிப்படுத்துகிறேன். இது சரியான மனநிலையில் ஆக்கபூர்வமான முறையில் எடுக்கப்பட்டதாக நம்புகிறேன். ஜெய் ஹிந்த்!" எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்