டாக்டர் எடப்பாடி கே.பழனிசாமி... தொடரும் நெட்டிசன்கள்!

Report Print Abisha in இந்தியா

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் பட்டத்தை வழங்கினார்.

மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இது குறித்து பல நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் வலவந்தவண்ணம் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்