பெண் எம்எல்ஏ பெயரில் வந்த பார்சல்... திறந்த போது வெடித்து சிதறியதால் நடந்த பரிதாபம்

Report Print Vijay Amburore in இந்தியா

கர்நாடக மாநில ரயில் நிலையத்தில் பார்சலில் வந்த வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியதில், திறந்து பார்த்த நபரின் கையில் பலத்த காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஞ்சலி நிம்பால்க்கர்.

இவரது பெயரில் இன்று ரயில் நிலையத்திற்கு ஒரு பார்சல் கூரியரில் வந்துள்ளது. அங்கிருந்த பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் திறந்து பார்த்த போது திடீரென வெடித்து சிதறியுள்ளது.

இதில் அந்த நபரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அங்கிருந்த மற்ற அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது ரயில் நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers