மகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் திருச்செங்கோடு அருகே மகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த செந்தில்(32) மற்றும் வனிதா(29) தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

திருச்செங்கோட்டில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் உதவியாளராக பணிபுரியும் வனிதா தனது மூத்த மகன் பிறந்தநாளுக்கு துணி எடுக்க நேற்று முன்தினம் ஈரோடு சென்றுள்ளார்.

பின்னர் கணவரை போனில் தொடர்பு கொண்ட வனிதா, இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் கடைசி பேருந்தை பிடிக்க முடியவில்லை. அதனால் தெரிந்தவர்கள் காரில் வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் இரவு வெகுநேரமாகியும் வனிதா குடியிருப்புக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் இதுகுறித்து மெணசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளையம் மயில்கல்பாளையத்தில் உள்ள குட்டையில் வனிதா சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும், குட்டையின் அருகே, மகன் பிறந்தநாளுக்காக வாங்கிய துணிகள், சொக்லெட் சிதறி கிடந்துள்ளன. இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த மெணசி பொலிசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலாத்கார முயற்சியில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் திருச்செங்கோடு பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers