நீ செத்து ஒழிந்தால் தான் எனக்கு திருமணம் நடக்கும்! மகனுடன் தனியாக வசித்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாத கோபத்தில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் (40), கார் ஓட்டுனரான இவர் தனது தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார்.

குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி பணம் கேட்டு தனது தாயாரை தொந்தரவு செய்துள்ளார்.

மேலும், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் கூறி வந்துள்ளார். ஆனால் சசிகலா, திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி இது தொடர்பாக அமர்நாத் மீண்டும் சண்டை போட்டார்.

அப்போது, நீ செத்து ஒழிந்தால் தான் எனக்கு திருமணம் நடக்கும் என்று கூறி அமர்நாத் தாய் சசிகலாவை கத்தியால் குத்தினார்.

பின்னர், சசிகலா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் அமர்நாத்தை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதன்படி அமர்நாத் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்