ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பில் ஆளுநரின் அறிவிப்பு வந்ததா? தமிழக அமைச்சர் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பில் ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வரவில்லை என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து கூறிய உச்சநீதிமன்றம் இந்த விடயத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தது.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த விடயத்தில் மெளனம் காத்து வருகிறார்.

இதனிடையில் ஏழு பேரையும் விடுவிக்க ஆளுநர் மறுத்ததாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ஏழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என கூறியுள்ளார்.

இதனால் ஏழு பேர் விடுதலை விவகாரம் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்