திருமணம் முடிந்து விருந்து சாப்பிட்ட பின்னர் மாயமான புதுப்பெண்! சிசிடிவி கமெராவில் மணமகன் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணம் முடிந்து கணவருடன் உட்கார்ந்து விருந்து சாப்பிட்ட பின்னர் காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அவரின் உறவுக்கார இளைஞருக்கும் கடந்த ஞாயிறு அன்று திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் மணமகனும், மணப்பெண்ணும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டனர்.

பின்னர் வரவேற்பு நிகழ்ச்சிக்காக தனது உடையை மாற்றி வருவதாக அங்குள்ள அறைக்குள் சென்ற மணப்பெண் வெகுநேரமாகியும் வெளியில் வரவில்லை.

இதையடுத்து அங்கிருந்த எல்லோரும் அவரை தேடியும் கிடைக்காததால் அங்குள்ள சிசிடிவி காட்சியை மணமகன் உள்ளிட்ட குடும்பத்தார் ஆய்வு செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் புதுப்பெண் இளைஞர் ஒருவருடன் காரில் ஏறி அந்த இடத்திலிருந்து தப்பி சென்றது அதில் தெரிந்தது.

இதையடுத்தே புதுப்பெண் தனது காதலருடன் ஓட்டம் பிடித்தார் என தெரியவந்தது.

இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாயமான புதுப்பெண்ணை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்