கிராமத்தில் அடிக்கடி இரவில் காணாமல் போன நாய்கள், ஆடுகள்... பின்னர் ஊர் மக்களுக்கு தெரியவந்த உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புகுந்துள்ள சிறுத்தை 4 ஆடுகளை கடித்து குதறியதால் ஊர் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டு யானை, சிறுத்தை, புலி, கரடி, மிளா, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வன விலங்குகள் அடிக்கடி மலையில் இருந்து இறங்கி கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

சிறுத்தையும் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை அடித்துக் கொன்று இழுத்துச் சென்று விடுகிறது.

இந்நிலையில் அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவர் தனது வீட்டில் 4 ஆடுகள் வளர்த்து வந்தார். அவ்வப்போது விவசாய கூலி வேலைக்கும் செல்வதுண்டு. நேற்று முன்தினம் இரவு மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 4 ஆடுகளை வீட்டை ஒட்டிய தொழுவத்தில் கட்டி போட்டிருந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் வள்ளியம்மாள் தொழுவத்திற்கு சென்று பார்த்த போது 4 ஆடுகளும் இறந்து கிடந்தன. அப்பகுதியில் சிறுத்தை வந்து சென்றதற்கான கால்தடங்களும் பதிவாகி இருந்தன. இதுகுறித்து பாபநாசம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் வள்ளியம்மாள், எனது கணவர் இறந்து விட்டதால், இந்த ஆடுகளை வைத்துதான் பிழைத்து வந்தேன். இப்போது அதையும் பறி கொடுத்து விட்டேன். எனக்கு உரிய நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் என்று கோரினார்.

இந்நிலையில் அந்த ஊர் மக்கள் ஆர்வத்துடன் நாய் வளர்த்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் நாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக காணாமல் போனது. தற்போது தான் அவர்களுக்கு நாய்களை சிறுத்தை வேட்டையாடியது தெரியவந்துள்ளது.

இப்படி சிறுத்தை அடிக்கடி ஊருக்கு வருவதால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...