சாலையோரத்தில் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி பெண்.. 5 மணி நேரமாக கிடந்த உடல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவர் சாலையோரம் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சாலையோரமாக சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் தினேஷ் குமார் என்பவரின் மனைவி சுஷ்மிதா (20) என்பதும், அவர் கைப்பையில் பழங்கள் வாங்கிக் கொண்டு தனது மாமனார் மாமியாரை பார்க்க சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து சுஷ்மிதாவின் மாமியார் கூறுகையில், சுஷ்மிதா கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிக்கொடி மாயமாகி உள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து சுஷ்மிதா நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிறைமாத கர்ப்பிணியான சுஷ்மிதாவின் உடல் உயிர் பிரிந்து 5 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டதால் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துவிட்டதாக சுகாதார மருத்துவ அதிகாரி மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்