நீ இறந்தால் தான் நான் மறுமணம் செய்ய முடியும்! தூக்கில் தொங்கிய இலங்கை தமிழ்ப்பெண்.. கதறும் சகோதரர்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் குடும்பத்தார் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அப்பெண்ணின் கணவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.

நாகர்கோவிலின் பழவிளையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜோன் ஜீனத் (33). இவருக்கும் இந்துராணி (32) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் தம்பதிக்கு 3½ வயதில் நித்தின்ஜோ என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் ஜீனத் தினமும் மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. எனவே கணவரை, மனைவி இந்துராணி கண்டித்து இருக்கிறார். எனினும் அவர் வீட்டில் தகராறு செய்வதை நிறுத்தவில்லை என்று தெரிகிறது.

இதன் காரணமாக மனவேதனை அடைந்த இந்துராணி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

இதைப் பாா்த்து அதிர்ச்சி அடைந்த உறவினா்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்துராணியின் சகோதரர் ரவிசந்திரன் (35) தலைமையில் உறவினர்கள் திரளாக வந்து மாவட்ட பொலிஸ் அதிகாரிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.

அதில், என் தங்கை இந்துராணியை ஜீனத் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தார்.

இந்துராணி இறந்தால் தான் வேறு பெண்ணை திருமணம் செய்ய முடியும் என்றும் கூறினார். இதை வைத்து பார்க்கும்போது இந்துராணி சாவில் மர்மம் இருக்கிறது.

இது குறித்த உண்மையை கண்டுபிடிக்க பொலிசில் மனு அளித்தேன், ஆனால் என் மனுவை பொலிசார் கிழித்து போட்டுவிட்டனர்.

அவர்களாகவே எழுதி வைத்திருந்த புகார் மனுவில் என்னை மிரட்டி கையெழுத்து போட வைத்தனர்.

இது குறித்து உண்மையை கண்டறிவதோடு என்னை மிரட்டிய பொலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்