சுர்ஜித் இறந்த சோகத்தில் மயக்கத்தில் இருந்த தாய்! அருகில் சிரித்து கொண்டிருந்த பெண் யார்? அதிர்ச்சி புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

குழந்தையை பறிகொடுத்த விரக்தியில் சுர்ஜித் தாய் மயங்கிய நிலையில் கிடக்க அவரருகில் நின்றிருந்த செவிலியர் சிரித்தபடி இருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததில் இருந்தே அவன் தாய் கமலா மேரி மயக்க நிலையிலேயே இருந்தார்.

இந்நிலையில் குழந்தை இறந்து நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சுர்ஜித் குடும்பத்தாரை சந்திக்க அவர்கள் வீட்டுக்கு வந்தார்.

அப்போது மேரி மயக்க நிலையில் கட்டிலில் படுத்திருந்தார்.

பக்கத்திலேயே மருந்து மாத்திரைகள் வைக்கப்பட, சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அதற்கான செவிலியர்களும் அங்கே இருந்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் மேரியின் உடல்நலம் குறித்து விசாரித்து கொண்டிருக்க, ஒரு செவிலியர் அங்கே சிரித்தபடி காணப்பட்டார்.

அவரது சிரிப்பை பலரும் கவனித்து புகைப்படமும் எடுத்துள்ளனர். குழந்தையை அடக்கம் செய்து ஒரு சில மணி நேரமே ஆகியிருந்த சமயம் அது.

எத்தனையோ தாய்மார்கள், மேரியின் மனநிலை அறிந்து 5 நாட்களாக கண்கலங்கி கொண்டிருந்த சூழலில், சம்பவ இடத்திலேயே செவிலியர் சிரித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த செவிலியரை பலரும் திட்டி தீர்த்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்