பற்கள் சீராக இல்லையே!... திருமணமான சில மாதங்களில் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன்

Report Print Fathima Fathima in இந்தியா
111Shares

தெலுங்கானாவில் மனைவியின் பற்கள் சீராக இல்லாததால் கணவர் முத்தலாக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானாவின் குஷாய்குண்டா பகுதியை சேர்ந்தவர் ருக்சனா பேகம், இவருக்கும் முஸ்தபா என்பவருக்கும் கடந்த ஜூன் 27ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் ருக்சனாவின் பற்கள் கோணலாக இருப்பதால் முத்தலாக் கொடுப்பதாக கடந்த வாரம் போன் செய்து கூறியுள்ளர் முஸ்தபா.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் 26ம் திகதி ஐதராபாத் காவல் நிலையத்தில் ருக்சனா புகார் அளித்துள்ளார்.

அதில், திருமணத்தின் போது மணமகன் வீட்டார் கேட்ட நகை, பணம் என எல்லாவற்றையும் எனது குடும்பத்தினர் கஷ்டப்பட்டு செய்து கொடுத்தனர்.

திருமணம் முடிந்த பின்னும் கூடுதலாக வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினர், 10 நாட்களாக ஒரு அறையில் என்னை அடைத்து வைத்ததால் உடல்நிலை சரியில்லாமல் போனது.

தொடர்ந்து என்னை என் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர், என் பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.

தற்போது என் பற்கள் சீராக இல்லை எனக்கூறி என் கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார், இதுபற்றி பொலிசார் விசாரிக்க வேண்டும் என கூறினார்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்