நான் சுர்ஜித் பேசுகிறேன்! கருவறையில் தொடங்கி கருப்பறையில் முடிந்த என் வாழ்க்கை... கண்ணீர் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

சுர்ஜித் நினைவாக திறக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அவர் பேசுவது போலவே எழுதப்பட்டுள்ள வாசகம் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பின்னர் சடலமாக மீட்கப்பட்டான்.

இந்த சம்பவம் தமிழக மக்களின் மனதை பெரியளவில் கலங்கடித்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பள்ளியிலுள்ள ஆழ்துளைக் கிணறு ஒன்று மழை நீர் சேமிப்பாக மாற்றப்பட்டது.

மேலும் அங்கு சுர்ஜித் நினைவாக ஒரு கல்வெட்டும் திறக்கப்பட்டது. இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்து வைத்தார்.

இந்தக் கல்வெட்டில், நான் சுர்ஜித் பேசுகிறேன். நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், எனது தாயின் கருவறையில் பிறந்து இரண்டு வயதில் ஆழ்துளைக் கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.

இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் என்னை போல் 80 மணி நேரம், மரணத்துடன் போராடிய அந்த தருணம் மிகவும் கொடுமையானது. நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனி வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்து வைக்காமல் என்னைபோல் உள்ள குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும் என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...