என் தாயை கொன்றுவிட்டேன்... திருமணமான 9 மாதத்தில் இளைஞரின் வெறிச்செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தாயை கொலை செய்தததை மகன் ஒப்பு கொண்டுள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சியை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுக்கும், பிரகாஷுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

வேலை எதுக்கும் செல்லாமல் பிரகாஷ் ஊர் சுற்றி வந்த நிலையில் அவர் தாய் பாப்பாத்திக்கும் மனைவி வெண்ணிலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனைவியை அவரது தந்தை வீட்டில் விட்டுவிட்டு நேற்றிரவு திரும்பிய பிரகாஷூக்கும் தாய் பாப்பாத்திக்கும் இடையே இது தொடர்பாக வாக்கு வாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தகராறு முற்றியதில் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தாயை பிரகாஷ் அடித்ததாகவும் அதை தடுக்க முயன்ற தந்தை ஆறுமுகத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலையில் சென்றுகொண்டிருந்த பிரகாஷிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் தாயை கொன்றதை அவர் எந்த தயக்கமும் இன்றி ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்