கேரளாவில் கடந்தாண்டு வெள்ளத்தின் போது நொடிப்பொழுதில் தீ விபத்திலிருந்து நோயாளியை காப்பாற்றிய இளைஞருக்கு நிரந்தர அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு கடுமையான வெள்ளத்தால் கேரளாவே தத்தளித்தது, இதன்போது பலரும் தங்களது சொந்த உடைமைகளை இழந்து அவதிப்பட்டனர்.
அப்போது, செப்டம்பர் 5ம் திகதி சம்பக்குளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நோயாளி ஒருவருக்கு, மேல் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டார்.
இதற்கான ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றிக் கொண்டு ஊழியர்கள் புறப்பட்டனர், இவர்களில் சையூபுதீன் என்பவரும் ஒருவர்.
திடீரென ஆக்சிஜன் உருளையிலிருந்து தீப்பற்ற, தன் உயிரையும் பொருட்படுத்தாது சையூபுதின் நோயாளியையும் பத்திரமாக காப்பாற்றினார்.
அடுத்த நொடியில் ஆம்புலன்ஸ் முழுவதும் தீயில் கருகியது, இதில் சையூபுதினுக்கு காயங்கள் ஏற்பட்டு 30 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் இவரது சேவையை பாராட்டு தற்போது நிரந்தர அரசு வேலையொன்று வழங்கப்பட்டுள்ளது.