பெண்ணாக பிறந்ததால் கொன்று புதைத்தேன்.... தந்தை கைது!

Report Print Abisha in இந்தியா

பெண்ணாக பிறந்ததால், தந்தையே குழந்தையை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரத்தைச் சேர்ந்தவன் வரதராஜன். இவனது மனைவி சவுந்தர்யா. திருமணமாகி 15மாதங்கள் ஆன நிலையில், 15நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனால், ஆத்திரத்தில் இருந்த வரதராஜன் குழந்தையை கொலை செய்ய முற்பட்டுள்ளான்.

தடுத்த உறவினர், அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில், திடீரென்று ஒருநாள் குழந்தை காணமல் போய்யுள்ளது. அப்போது அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பள்ளம் ஒன்றில், சந்தேகப்பட்டு மண்ணை தோண்டிய போது அதனுள் துணியால் சுற்றப்பட்டு குழந்தை இருந்துள்ளது.

பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்வ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது, வரதராஜனின் மேல் சந்தேகம் ஏற்பட்டு விசாரணையில் ஈடுபட்டடுள்ளனர். அப்போது, அவன் தன் மகனை கொன்று புதைத்ததை ஒப்பு கொண்டுள்ளான்.

இதை அடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் அவனை சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்