திருமணமான 5 நாளில் புதுப்பெண்ணை பார்த்து அலறி துடித்த மாமியார்...கணவன் இல்லாத போது நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சேதுபதி (22). இவருக்கும் சிவசக்தி (18) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு சேதுபதி தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் மனைவியுடன் குடியிருந்து வருகிறார். கீழ்தளத்தில் சேதுபதியின் பெற்றோர் வசிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து சேதுபதி வெளியே சென்ற நிலையில் சிவசக்தி மட்டும் தனியாக இருந்தார்.

நீண்ட நேரமாகியும், மாடியில் இருந்து சிவசக்தி கீழே வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவருடைய மாமியார் புஷ்பவள்ளி, மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தார்.

அப்போது, மின் விசிறி பொருத்துவதற்காக அமைக் கப்பட்டிருந்த கொக்கியில் சுடிதார் துப்பட்டாவால் சிவசக்தி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

இதனை கண்ட புஷ்பவள்ளி அலறி துடித்து நிலையில் கதறி அழுதார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தூக்கில் தொங்கிய சிவசக்தியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிவசக்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிவசக்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்