உயிரை கொடுத்து நாக பாம்பிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றிய விசுவாச நாய்.. மீளா துயரத்தில் குடும்பத்தினர்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்புடன் சண்டையிட்டு குழந்தைகளை காப்பாற்றிய நாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் Khordhaவில் உள்ள Mundamuhana கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்த லேடன் என்ற ராட்வீலர் நாயின் உரிமையாளர் சுனில் கிருஷ்ணா சமந்திரே சம்பவம் குறித்து கூறியதாவது, சம்பவத்தின் போது பொலிஸ் நாயான லேடன் வீட்டின் முன் கட்டப்பட்டிருந்தது.

வீட்டின் முன் எனது பேர குழந்தைகளான சோம்(3) மற்றும் பிராச்சி(6) ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்த போது ஐந்து அடி நாக பாம்பு நுழைந்துள்ளது.

குழந்தைகள் பாம்பை பார்த்தவுடன் கதறி அழ தொடங்கினர். உடனே லேடன் பாம்பின் தலையை கடித்து கொன்றது. ஆனால், சண்டையில் லேடன் தன்னை தானே கடித்துக்கொண்டது.

குழந்தையின் சத்தம் கோட் சம்பவயிடத்திற்கு விரைந்த குடும்பத்தினர் லேடனின் நிலையை கண்டு, உடனே அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், லேடன் இறந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர் என சுனில் கூறியுள்ளார்.

(Image: odishabytes.com)

சுனில் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியதாவது, லேடன் ஒரு விசுவாசமான நாய், அது கட்டப்படாமல் இருந்திருந்தால் உயிர் தப்பியிருக்கும் என கூறியுள்ளார்.

லேடனின் தியாகத்தை எங்களால் மறக்க முடியாது. அடுத்த ஜென்மத்தில் லேடன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என சுனில் மனைவி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்