கலங்க வைத்த இலங்கை தமிழ்பெண் இருக்கும் புகைப்படம்... பரிதவித்து வருவதாக குமுறல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் சின்னசேலத்தில் இலங்கை தமிழர்கள் முகாமில் உள்ள வீடுகள் வசிக்க முடியாத அளவில் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை காட்டும் வகையிலான புகைப்படம் வெளியாகியுள்ளது.

சின்னசேலத்தில் இலங்கை முகாமில் 79 குடியிருப்புகளில் 244 பேர் வசிக்கின்றனர்.

இங்கு ஏற்கனவே இந்திய அரசாங்கம் மூலம் கட்டித்தரப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் பழுதாகிப்போன நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் புதிதாக 85 வீடுகளைக் கட்டிக் கொடுத்தது.

அதில், 75 வீடுகளில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால், இந்த வீடுகளின் மேற்கூரை கான்கிரீட் சுவரில் அதிகளவில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

மழைக்காலங்களில் அனைத்து வீடுகளும் ஒழுகுவதால் வீடுகளில் தங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இங்குள்ள ஒரு வீட்டில் வசிக்கும் பெண் மேற்கூரை எவ்வளவு மோசமாக உள்ளது என பாருங்கள் என சுட்டி காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அத்துடன் இங்குள்ளவர்களுக்கு உரிய சமையல் எரிவாயு இணைப்பு, பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

எனவே சின்னசேலம் பகுதி முகாமில் தங்கியிருக்கும் மக்களின் அடிப்படை வசதிகளான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக போர்வெல்கள் அமைப்பதுடன், வாரத்திற்கு இரு முறை தண்ணீர் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளின் மேற்கூரையை புதுப்பித்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இங்கு வசிப்பவர்கள் கோரியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்