பேரறிவாளனை பார்க்க மிகவும் ஆவலுடன் உள்ளேன்! மகிழ்ச்சி பொங்க பேசிய அவர் தந்தை

Report Print Raju Raju in இந்தியா

சிறையிலிருந்து பரோலில் வெளியில் வரும் பேரறிவாளனை பார்க்க ஆவலுடன் இருப்பதாக அவர் தந்தை குயில்தாசன் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு பரோல் கேட்டு தாய் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து அந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் கிடைத்தது.

இத்தனை ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த முதல் பரோலும் அதுதான். உடல்நிலை பாதித்த தந்தையை அருகிலிருந்து பார்த்துக்கொண்டார்.

பின்னர் மீண்டும் அவர் சிறைக்கு சென்றார். இந்நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ளது.

புழல் மத்திய சிறை நிர்வாகம் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் வெளியில் அனுப்ப முடிவுசெய்திருக்கிறது. இன்னும் ஓரிரு நாள்களில் அவர் வெளியில் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

இது குறித்து அவர் தந்தை குயில்தாசன் கூறுகையில், எனக்கு உடல்நிலை சரியில்லை. என்னைப் பார்க்க மகன் விரும்புகிறார். என் மகள் வழி பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது. தாய்மாமன் என்ற முறையில் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற காரணங்களால் தான் அறிவு பரோலுக்கு விண்ணப்பித்தார்.

பேரறிவாளனை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers