ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்! கவனத்தை ஈர்த்த புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளுக்கும் ஒரேநாளில் திருமணம் நடைபெற உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பொத்தன்கோடு நானுட்டுகாவு என்ற கிராமத்தில் கடந்த 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி பிரேம்குமார்- ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தது. 4 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை பிறந்தது.

அனைவரும் ஒரே ராசியில் உத்ர நட்சத்திரத்தில் பிறந்ததால் தனது குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா மற்றும் ஆண் குழந்தைக்கு உத்ராஜன் எனப் பெயர் வைத்தார்.

இவர்கள் 4 பேரும் ஒரே மாதிரி வளர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த குழந்தைகளுக்கு 9 வயதாக இருக்கும்போது ப்ரேம் குமாருக்கு ஏற்பட்ட தொழில் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

இது கேரளாவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. 5 குழந்தைகளைப் பெற்ற தந்தை தொழில் நஷ்டம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் செய்வது அறியாது திண்டாடினர். இந்நிலையில் கேரள மாநில அரசு அவருக்குக் கூட்டுறவு வங்கியில் பணி வழங்கியது.

அதன் பின் தன் கடும் உழைப்பால் தனது 5 குழந்தைகளையும் வளர்த்தார் பூமாதேவி.

தற்போது உத்ரா பேஷன் டிசைனராகவும், உத்தரஜா, உத்தம்மா ஆகியோர் மயக்கவியல் மருத்துவராகவும், உத்தாரா பத்திரிக்கையாளராகவும், பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் 4 பேருக்குத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்க்கப்பட்டது.

தற்போது 4 பேருக்கும் தகுந்த மாப்பிள்ளைகள் கிடைத்துவிட்ட நிலையில் இவர்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதற்கான ஏற்பாடுகளை இந்த நான்கு பேருடன் உடன் பிறந்த உத்ராஜன் செய்து வருகிறார்.

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே மணிமேடையில் திருமணம் நடக்கவுள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்