ஆசையுடன் சொந்த ஊருக்கு வந்த காதல் ஜோடி! துடிதுடித்து இறந்த பரிதாபம்

Report Print Fathima Fathima in இந்தியா

கர்நாடகாவில் கலப்பு திருமணம் செய்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் ஊர் திரும்பிய காதல் ஜோடி கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடக் மாவட்டத்தின் லக்காலாகட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ், கங்கம்மா என்ற இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வேறு வேறு சாதி என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், எனினும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இருப்பினும் எதிர்ப்பு அதிகமானதால் பல இடங்களுக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர், இரு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர், இவர்களை பார்த்த கிராம மக்கள் கல்லால் அடிக்கத் தொடங்க சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்