உயிருடன் தாயாரும் மகனும் எரித்துக் கொலை: பெண்ணே பெண்ணுக்கு எமனான கொடுமை

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில் பெண் ஒருவரையும் அவரது 6 வயது மகனையும் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வியாழனன்று இரவு குறித்த பெண்ணும் மகனும் குடியிருந்த வீட்டுக்கு சென்ற அந்த பெண் மருத்துவர் வெளியில் இருந்து குடியிருப்பை பூட்டிவிட்டு நெருப்பு வைத்துள்ளார்.

இதில் அந்த 6 வயது சிறுவனும் தாயாரும் உடல் கருகி மரணமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட பெண்ணுக்கும் அந்த பெண் மருத்துவரின் கணவருக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது.

இது பெண் மருத்துவருக்கு தெரியவர, அவர் தமது மருத்துவரான கணவரை கண்டித்துள்ளார். இருப்பினும் குறித்த பெண்ணுடன் அந்த மருத்துவருக்கு உறவு நீடித்துள்ளது.

மட்டுமின்றி, அந்த பெண்ணுக்கும் மகனுக்கும் தனியாக ஒரு வீட்டை விலைக்கு வாங்கி பரிசளித்துள்ளார் அந்த மருத்துவர்.

Dr. Seema Gupta and her husband Dr. Sudeep Gupta.

கணவரின் இந்த நடவடிக்கை பெண் மருத்துவருக்கு ஆத்திரத்தை தரவே, வியாழனன்று அந்த குடியிருப்புக்கு சென்று அவர்கள் இருவரும் தப்பாத வகையில் வெளியில் இருந்து பூட்டிவிட்டு குடியிருப்புக்கு நெருப்பு வைத்துள்ளார்,

இதில் ஆறு வயது சிறுவனும் அந்த தாயாரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பெண் மருத்துவர் சீமா, அவரது கணவர் சுதீப் மற்றும் சீமாவின் மாமியார் என மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்