கணவர் அப்படிப்பட்டவரா? அதிர்ச்சியில் விவாகரத்து கேட்ட மனைவிக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தனது கணவர் ரவுடி எனத் தெரிந்து விவாகரத்து கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் ஆக்கூர் அடுத்துள்ள தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சி. இவருக்கும் அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஜான் ரோசர், ஆசோர் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜான்சிக்கு தனது கணவர் பாஸ்கர் ரவுடி என்பதும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜான்சி தனது கணவர் பாஸ்கரி்டம் கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்துள்ளார். பாஸ்கரை தேடி வீட்டிற்கு காவலர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஜான்சி, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதை அறிந்த பாஸ்கர் அடியாட்களுடன், வந்து ஜான்சியின் வீட்டை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து செம்பனார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜான்சி குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தனது இரண்டு மகன்களுடன் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் ஜான்சி புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்