வீட்டில் இருந்த சிகரெட் துண்டுகள்! தூக்கில் தொங்கி கொண்டிருந்த பெண்.. வசமாக சிக்கிய இன்னொரு பெண்

Report Print Raju Raju in இந்தியா

புதுச்சேரியில் வயதான பெண்ணை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காரைக்காலை சேர்ந்த முருகேசன் மனைவி வளர்மதி (50).

இவர் அப்பகுதி மக்கள் பலரிடம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் கடன் கொடுத்தவர்கள் கிராம பஞ்சாயத்தாரிடம் முறையிட்டனர். இதையடுத்து பஞ்சாயத்தார்கள் வளர்மதியிடம் கடனை திரும்ப செலுத்தும்படி அறிவுறுத்தினர்.

இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த காத்தம்மாள்(71) என்பவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த சூழலில் காத்தம்மாள் இறந்த ஒரு சில நாளில் வளர்மதி ரூ.80 ஆயிரம் கடன் தொகையை கிராம பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்தார்.

இந்த பணம் எப்படி வந்தது? என பஞ்சாயத்தார் கேட்டபோது, வளர்மதி முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி உள்ளார்.

இதன் காரணமாக சந்தேகம் அடைந்த கிராம பஞ்சாயத்தார், பொலிசில் இது குறித்து கூறினர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் வளர்மதியிடம் நடத்திய விசாரணையில், கடனை திருப்பி செலுத்துவதற்காக வளர்மதி, காத்தம்மாளிடம் இருந்து 5½ பவுன் நகையை திருடி விட்டு அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது.

மேலும் வேறு யாரோ கொலை செய்தது போல் காட்டுவதற்காக காத்தம்மாளின் வீட்டில் சிகரெட் துண்டுகளை விட்டுச் சென்று நாடகம் ஆடியதும் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட வளர்மதி மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

இதில் நீதிபதி கார்த்திகேயன் வளர்மதிக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை (14 ஆண்டுகள் சிறை) விதித்து உத்தரவிட்டார்.

மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், நகையை திருடிய வழக்கில், 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்