சர்ச்சைக்குரிய வழக்கு... இன்று தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் - திக்குமுக்காடுமா இந்தியா?

Report Print Abisha in இந்தியா

பாபர்மசூதி இருப்பிடமானது யாருக்கு சொந்தம் என்ற வழக்கின் தீப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், இந்தியா முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இஸ்லாமியகர்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இந்து அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இதனால், கலவரம் வெடித்து நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்து அமைப்பினர், அது ராமர் பிறந்து வளர்ந்த இடம் என்றும், அதில் இஸ்லாமியர்கள் கையகப்படுத்தி மசூதி கட்டியதாகவும் அதனாலேயே இடித்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

1993ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் திகதி மத்திய அரசு அந்த சர்ச்சைக்குரிய நிலத்தை கையகப்படுத்தியது. அதன் பின் இரு அமைப்புகளும் அந்த நிலத்திற்கு உரிமை கோரி அதே ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதற்கு 2010ஆம் ஆண்டு 3நீதிபதிகள் கொண்ட அமர்வு நிலத்தை பகிர்ந்தளித்து தீர்ப்பு வழங்கியது.

ஆனால் இரு அமைப்புகளும் அதை ஏற்க முடியாது என்று அலாபாத் நீதிமன்றத்தில் 14 மனுகள் தாக்கல் செய்யப்பட்டது.

2019ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3நபர் மத்தியஸ்தர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. அந்த குழு நடத்திய பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படவில்லை

அதன்பின் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் 40 நாட்கள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட 71ஆண்டுகள் நீடிக்கும் இந்த பிரச்னையில் இன்று காலை 10:30மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இது இந்தியாவை கலவரபூமியாக மாற்றமல் இருக்க அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அதிகாரிகள் தீவிர பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து அல்லது இஸ்லாமியர்கள் என்று யாரேனும் ஒரு தரப்பினருக்கு இந்த தீர்ப்பு பாதகமாக இருந்தால், அது நாட்டை திக்குமுக்காட செய்யும் என்று பொதுவான கருத்து நிலவுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்