தனது தந்தையின் தீர்ப்பை மாற்றி எழுதிய நீதிபதி உள்பட 5நீதிபதிகள்.... அயோத்தி தீர்ப்பு

Report Print Abisha in இந்தியா

சர்ச்சைக்குரிய அயோத்தி நில வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில், தீர்ப்பை வெளியிட்ட 5நீதிபதிகள் பற்றிய சில தகவல்கள்

நீதிபதி ரஞ்சன் கோகோய்

தற்போது உச்சநீதிமன்ற தலமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பவர். 65வயதாகும் ரஞ்சன் கோகோய்க்கு வரும் 17ஆம் திதியுடன் பணிக்காலம் முடிவடைய உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்திலிருந்து முதல் தலைமை நீதிபதி இவர்தான். இவரது தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் ஆவார்.

ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் குஜராத் அரசாங்கத்திற்கு எதிரான வழக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் வருமானம் பற்றிய வழக்கு, பல்லாண்டுகளாக அசாமில் வாழ்ந்து வரும் வங்கதேச குடியேறிகள் சார்ந்த வழக்கு போன்ற பல்வேறு வழக்குகளில் ரஞ்சன் சிறப்பான தீர்ப்பை வழங்கியவராக அறியப்படுகிறார்.

நீதிபதி எஸ்.ஏ. பாப்டே

தலமைநீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு பின் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்க இருப்பவர் இவரோ. இவர் குடும்பம் முழுக்க பல வழக்கறிஞர்களை கொண்டது. அவரது தாத்தாவும் ஒரு வழக்கறிஞர்தான். பாப்டேவின் தந்தையான, அர்விந்த் பாப்டே, 1980 மற்றும் 1985ல் மகாராஷ்டிராவின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தார்.

ஆதார் வழக்கு, என்ஆர்சி அசாம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் பாப்டே பங்கு வகித்திருக்கிறார்.

நீதிபதி சந்திரசூட்

1985ஆம் ஆண்டு இவரது தந்தை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கி, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் மிகவும் அறியப்பட்டவர்தான் நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.

திருமண உறவுக்கு வெளியே கொள்ளும் உறவு தவறு என வரையறுக்கும் சட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று இவரது தந்தை நீதிபதி ஒய்.வி சந்திரசூட் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

ஆனால், பின்னர் அவரது மகன் டி.ஒய். சந்திரசூட், சட்டப்பிரிவு 497 பெண்களின் மாண்புக்கும், சுயமரியாதைக்கும் எதிராக இருப்பதாக தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி அசோக் பூஷண்

உத்தர பிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த நீதிபதி அசோக் பூஷண் 2016ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியானார். 2021ஆம் ஆண்டு வரை அவர் பணியில் இருப்பார்.

பான் அட்டையோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்குவதற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி அர்ஜூன் சிக்ரியோடு, அந்த நீதிபதிகள் அமர்வில் நீதிபதி பூஷணும் இடம்பெற்றிருந்தார்.

நீதிபதி அப்துல் நசீர்

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி அப்துல் நசீர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் ஓய்வு பெறுவார்.

நாட்டின் எந்தவொரு உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக நீதிபதி அப்துல் நசீர் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்