அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்! வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

அயோத்தி தீர்ப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லை எனவும் அதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் எனவும் சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அயோத்தி விவாகாரத்தில் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று இடத்தை மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து சன்னி வக்ஃப் வாரியம் கூறுகையில், 5 ஏக்கர் நிலம் எங்களுக்கு மதிப்புடையது இல்லை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மேல்முறையீடு செல்வோம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்றும், ஆனால் தீர்ப்பால் திருப்தி அடையவில்லை என்றும் சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்