ராம் அல்லது ரஹீம்...! அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிரடி கருத்து

Report Print Basu in இந்தியா

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் மோடி கூறியதாவது, அயோத்தி விவகாரம் தொடர்பாக மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை வெற்றி அல்லது தோல்வியாக யாரும் பார்க்கக்கூடாது. ராம் பக்தி அல்லது ரஹீம் பக்தி இருந்தாலும், தேச பக்தியின் உணர்வை நாம் பலப்படுத்துவது கட்டாயமாகும். அமைதியும் நல்லிணக்கமும் மேலோங்கட்டும் என தெரிவித்துள்ளார்.

அதேசமயம், மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசு ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்