திருமணம் முடிந்து ஒருமுறை கூட தாய் வீட்டிற்கு திரும்பாத மகள்... இறுதியில் சாம்பலாக பார்த்த தந்தை

Report Print Vijay Amburore in இந்தியா
1733Shares

மனைவி மற்றும் மகளை தீ வைத்து எரித்துக்கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் மற்றும் மாமனாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஜஸ்பால் சிங், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக 27 வயதான ஹர்மான்ப்ரீட் என்கிற இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு மகள் இருந்தார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் பொலிஸாருக்கு போன் செய்த ஜஸ்பால் சிங், தன்னுடைய மனைவி தேநீர் போடுவதற்காக மகளுடன் சமையலறைக்கு சென்ற போது சிலிண்டர் விபத்து ஏற்பட்டதாகவும், அதில் இருவரும் கருகி பலியாகிவிட்டதாவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து சென்ற பொலிஸார், அங்கு தீவிர ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தனர். சமையலறையினுள் உருகிய நிலையில் 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேன் மற்றும் எந்த பாதிப்பும் இல்லாமல் சிலிண்டர் தரையில் கிடந்தது பொலிஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தேநீர் போடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் எதுவும் அந்த அந்த இடத்தில் இடம்பெறவில்லை. மேலும், எரிவாயு குழாய் வெட்ட முயற்சிக்கப்பட்டிருப்பதையும் பொலிஸார் கண்டறிந்தனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹர்மான்ப்ரீட் தந்தை, தனது மகள் ஜஸ்பாலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.

“அவரும் அவரது பெற்றோரும் ஆரம்பத்தில் இருந்தே என் மகளை துன்புறுத்தினார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் எங்களை சந்திக்க, எங்களுடன் பேச என் மகளை அனுமதிக்கவில்லை. அவளிடம் மொபைல் போன் இல்லை. தினமும் அவளை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜஸ்பால் சிங் மற்றும் அவரது தந்தை மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்திருப்பதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்