அயோத்தி தீர்ப்பை மதிக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்

Report Print Abisha in இந்தியா

அயோத்தி தீர்ப்பு குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இன்று சர்ச்சைக்குரிய நிலமான அயோத்தி குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இஸ்லாமியர்களுக்கு 5ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்