அயோத்தி தீர்ப்பு குறித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீமானின் கருத்து வெளியானது!

Report Print Raju Raju in இந்தியா

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்பு தானே தவிர நீதியல்ல என சீமான் தெரிவித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான வழக்கான அயோத்தி நில பிரச்னையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில், ராமர் கோவில் கட்டலாம் என்றும், வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்கவும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

இந்த தீர்ப்பு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும், பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்! பாபர் மசூதி இடிப்பென்பது இசுலாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது என பதிவிட்டுள்ளார்.

அதே சமயம் பாபர் மசூதி இடிப்பு வேறு, அந்த நிலம் சம்மந்தப்பட்ட வழக்கு வேறு என இருக்கும் நிலையில் சீமான் இரண்டையும் சம்மந்தப்படுத்தி பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்